முக்கிய செய்தி
இலங்கையில் இன்று துக்க தினம்!
ஈரானிய ஜனாதிபதியின் திடீர் மறைவையொட்டி இலங்கையில் இன்று (21) தேசிய துக்க தினம் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. அரச நிர்வாக, உள்நாட்டலுவல்கள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்கள் அமைச்சின் செயலாளர் பிரதீப் யசரத்ன வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. அதற்கமைய, அனைத்து அரச நிறுவனங்களிலும் இன்றைய தினம் தேசியக் கொடியை அரைக்கம்பத்தில் பறக்கவிடுமாறும் குறிப்பிடப்பட்டுள்ளது