உள்நாட்டு செய்தி
பெரிய வெங்காயத்தின் விலையில் மாற்றம்!
இலங்கையில் ஒரு கிலோகிராம் பெரிய வெங்காயத்தின் மொத்த விலை 50 ரூபாவினால் வீழ்ச்சியடைந்துள்ளதாக சந்தை வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அண்மையில் பெரிய வெங்காய ஏற்றுமதிக்கு இந்தியா விதித்த கட்டுப்பாடு காரணமாக ஒரு கிலோகிராம் பெரிய வெங்காயத்தின் விலை 700 ரூபாய் வரை அதிகரித்தது.
அதனைத் தொடர்ந்து இலங்கை அரசாங்கம் சீனாவில் இருந்து பெரிய வெங்காயத்தினை இறக்குமதி செய்தது. இந்தநிலையில் தற்போது சந்தையில் ஒரு கிலோகிராம் பெரிய வெங்காயத்தின் மொத்த விலை 50 ரூபாவினால் வீழ்ச்சியடைந்துள்ளதாக சந்தை வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.