உள்நாட்டு செய்தி
சட்டவிரோத சுற்றுலா விசாவில் ரஷ்யாவுக்கு_ 120 பேரை அனுப்பிய சந்தேக நபர் கைது..!
சட்டவிரோதமாகச் சுற்றுலா விசாவில் சுமார் 120 பேரை ரஷ்யாவிற்கு அனுப்பிய சந்தேகத்தின் பேரில் தெஹிவளை பிரதேசத்தில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளால் சந்தேக நபர் இன்று திங்கட்கிழமை (20) கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருவதாகவும் நாளை (21) நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.