உள்நாட்டு செய்தி
இராணுவ வாகனம் மோதி யுவதி உயிரிழப்பு!
பிறந்தநாளில் இராணுவ வாகனம் மோதி யுவதி ஒருவர் யாழ்ப்பாணத்தில் இன்று (20) உயிரிழந்துள்ளார்.
வாதரவத்தையைச் சேர்ந்த சுதாகரன் சாருஜா என்ற 23 வயதான யுவதியே உயிரிழந்துள்ளார்.
வீதியை கடப்பதற்காக குறித்த யுவதி வீதியோரம் நின்றுள்ளார். இதன்போது, யுவதி நின்ற கரைக்கு மறுகரையாக – எதிர்திசையில் புத்தூர் சந்தியிலிருந்து இராணுவ உயரதிகாரிகள் பயணித்த வான் வேகமாக வந்தது.
வீதியின் இடது கரையில் சென்ற இந்த வாகனம் வீதியின் வலதுகரையில்
நின்ற யுவதியை மோதி, அருகில் இருந்த ரோலர் இயந்திரத்துடனும் மோதி கவிழ்ந்தது.
விபத்தில் காயமடைந்தவரை வைத்தியசாலைக்கு கொண்டு சேர்ப்பதில் தாமதம் ஏற்படவே செல்லும் வழியிலேயே யுவதி உயிரிழந்துள்ளார்.
யுவதியின் சடலம் அச்சுவேலி பிரதேச வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
விபத்துச் சம்பவம் தொடர்பாக இராணுவத்தினரிடம் அச்சுவேலி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.