உள்நாட்டு செய்தி
புத்தளம் மாவட்ட பாடசாலைகளுக்கு விசேட விடுமுறை…!
புத்தளம் மாவட்டத்தின் அனைத்து பாடசாலைகளுக்கும் நாளை (20) விசேட விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 18 ஆம் திகதி இரவு முதல் பெய்து வரும் கடும் மழையினால் புத்தளம் மாவட்டத்தில் உள்ள பல பாடசாலைகள் முற்றாக நீரில் மூழ்கியுள்ளதுடன், பல கிராமங்களில் உள்ள பிள்ளைகள் பாடசாலைக்கு வருவதில் சிக்கல்கள் ஏற்பட்டுள்ளதை கருத்திற்கொண்டு இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
வடமேல் மாகாண ஆளுநரின் உத்தரவின் அடிப்படையில், இந்த உத்தரவை நடைமுறைப்படுத்துமாறு புத்தளம் மற்றும் ஹலவத்தை கல்விப் பணிப்பாளர்களுக்கு அறிவித்துள்ளார்