உள்நாட்டு செய்தி
ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் கொலை…!
மீரிகம – மாலதெனிய, நால்ல பிரதேசத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் கொலை செய்யப்பட்டுள்ளனர். இன்று (19) காலை குறித்த கொலைச் சம்பவம் பதிவாகியுள்ளது. 42 வயதுடைய ஒருவரே குறித்த கொலைகளைச் செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 80 வயதான தந்தை, 77 வயதான தாய் மற்றும் 42 வயதான மகன் ஆகியோரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளனர். சம்பவம் தொடர்பில் மாலதெனிய பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்