எல்.பி.எல் ஏலத்தில் 400க்கும் மேற்பட்ட வீரர்கள்

In Sports
May 19, 2024

 

லங்கா பிரீமியர் லீக் (எல்பிஎல்) டி20 கிரிக்கெட் போட்டிக்கான வீரர்கள் ஏலத்தில் இலங்கை மற்றும் வெளிநாடுகளைச் சேர்ந்த 400க்கும் மேற்பட்ட வீரர்கள்பங்கேற்க உள்ளனர்.

மே 21ஆம் தேதி கொழும்பில் நடைபெறவுள்ள இந்த ஏலத்தில்
பல முக்கிய சர்வதேச வீரர்கள் உட்பட 260 வெளிநாட்டு வீரர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர் என்று LPL போட்டியின் பணிப்பாளர் சமந்தா தொடன்வெல ஊடகங்களுக்கு தெரிவித்தார்.

ஜூலை 1 முதல் 21 வரை நடத்த திட்டமிடப்பட்ட LPL 2024 இன் ஐந்தாவது சீசனில் 600 க்கும் மேற்பட்ட வெளிநாட்டு வீரர்களின் பதிவு செய்யப்பட்டுள்ள போதும் அவர்களில் சுமார் 260 பேர் மட்டுமே ஏலத்திற்கான இறுதிப் பட்டியலுக்கு சேர்க்கப்பட்டுள்ளனர்.