உள்நாட்டு செய்தி
இந்தோனேசிய கடல்சார் விவகாரங்கள் மற்றும் முதலீடுகளுக்கான ஒருங்கிணைப்பு அமைச்சருடன் ரணில் சந்திப்பு
![](https://tm.lkpost.lk/wp-content/uploads/2023/02/1659753987-1659709570-ranil-W-He-L.jpg)
இந்தோனேசியாவிற்கு விஜயம் செய்துள்ள ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் இந்தோனேசிய கடல்சார் விவகாரங்கள் மற்றும் முதலீடுகளுக்கான ஒருங்கிணைப்பு அமைச்சர் லுஹுத் பின்சார் பண்ட்ஜாய்டன் Luhut Binsar Pandjaitan ஆகியோருக்கு இடையில் இன்று (19) நடைபெற்ற இருதரப்பு சந்திப்பில், Global Blended Finance Alliance அமைப்பின் நாடுகள், வெப்ப வலயத்திற்கான இலங்கையின் முன்னெடுப்பு (Tropical Belt Initiative), நீலப் பொருளாதாரம் (Blue Economy)கடற்பாசி தொழில் துறை, உலக தென்துருவ நாடுகளுக்கிடையிலான ஒத்துழைப்பு, சதுப்புநில பயிர்ச்செய்கை தொடர்பான ஆராய்ச்சி ஒத்துழைப்பு உள்ளிட்ட நடவடிக்கைகளை ஒருங்கிணைக்க இருதரப்பு பணிக்குழுவை நிறுவுதல் மற்றும் இந்துச் சமுத்திர எல்லை நாடுகளில் (IORA) தற்போதைய தலைவராக இலங்கையின் வகிபாகம் உள்ளிட்ட விடயங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. – PMD