உள்நாட்டு செய்தி
பொலிஸ் உத்தியோகத்தர் ஆற்றில் மூழ்கி உயிரிழந்த சோகம்..!

குளியாப்பிட்டிய பொலிஸ் குற்றப்புலனாய்வு பிரிவில் கடமையாற்றும் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.
துப்பாக்கி சுடுதல் பயிற்சிக்காக பொலிஸ் துப்பாக்கி சுடுதல் பயிற்சி நிலையத்துக்குச் சென்றிருந்த குறித்த பொலிஸ் உத்தியோகத்தர்,
நிக்கவரெட்டிய, மாகல்லேகம ஆற்றில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக நிக்கவரெட்டிய தலைமையக பொலிஸார் தெரிவித்தனர்.
இவர் குளியாப்பிட்டிய பொலிஸ் பிரிவில் கடமையாற்றும் பொலிஸ் உத்தியோகத்தர்கள் குழுவுடன் இணைந்து,
நிக்கவரெட்டிய, ஹுலுகல்ல பிரதேசத்தில் உள்ள பொலிஸ் துப்பாக்கி சுடுதல் பயிற்சி நிலையமொன்றுக்குச் சென்றிருந்தபோதே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை நிக்கவரெட்டிய தலைமையக பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.