உள்நாட்டு செய்தி
அஞ்சல் மூலம் இலங்கைக்கு அனுப்பப்பட்ட போதைப் பொருட்கள் மீட்பு
வெளிநாட்டில் இருந்து இலங்கைக்கு அஞ்சல் மூலம் அனுப்பப்பட்ட சுமார் 10 கோடி ரூபா பெறுமதியான போதைப் பொருட்களை சுங்கத் திணைக்களத்தினர் மீட்டுள்ளனர்.சீதுவை பகுதியில் உள்ள களஞ்சியசாலை ஒன்றிலிருந்து குறித்த போதைப் பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன.குவாட்டமாலாவில் இருந்து பொலன்னறுவை பகுதியில் உள்ள விவசாயி ஒருவரின் பெயருக்கு இந்த போதைப் பொருட்கள் அடங்கிய பொதி அனுப்பப்பட்டுள்ளது.இதன்படி, குறித்த பொதியில் இருந்து மூன்று கிலோ கிராமிற்கும் அதிக நிறையுடைய ஐஸ் மற்றும் மெதெம்பெட்மைன் ஆகிய போதைப் பொருட்கள் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.