முக்கிய செய்தி
ரத்துபஸ்வல வழக்கின் தீர்ப்பு!
சுத்தமான குடிநீர் கோரி, கம்பஹா ரத்துபஸ்வல பகுதியில் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் சிலர் துப்பாக்கிச் சூடு நடத்தி கொல்லப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய 4 சந்தேகநபர்களும் குற்றமற்றவர்களாக அறிவித்து விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.இராணுவ பிரிகேடியர் ஒருவர் உட்பட 4 இராணுவத்திரே இவ்வாறு விடுதலை செய்யப்பட்டுள்ளனர். கம்பஹா மூவரடங்கிய விசேட மேல் நீதிமன்ற நீதிபதிகள் ஆயத்தினால் இந்த தீர்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.பிரதிவாதிகள் அனைவரும் குறித்த சந்தர்ப்பத்தில் சட்டவிரோதமாக அங்கு ஒன்று கூடியதாக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டை நிரூபிக்க முடியாமையை அடுத்தே இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளதாக நீதிபதிகள் ஆயம் அறிவித்துள்ளது.2013ஆம் ஆண்டு சுத்தமான குடிநீர் கோரி நடத்தப்பட்ட போராட்டத்தின் போது, 3 பேர் கொலை செய்யப்பட்டமை மற்றும் 50 பேர் வரை காயமடைந்தமை தொடர்பில் இராணுவ உத்தியோகத்தர்களுக்கு எதிராக சட்டமா அதிபர் திணைக்களத்தினால் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டிருந்தது.