உள்நாட்டு செய்தி
முன்னாள் இராணுவத் தளபதி ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைவு!
முன்னாள் இராணுவத் தளபதியான ஜெனரல் மகேஷ் சேனாநாயக்க ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைந்து கொண்டார்.ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாசவின் நாட்டைக் கட்டியெழுப்பும் வேலைத்திட்டத்திற்கு ஆதரவு வழங்கும் நோக்கிலேயே அவர் இந்த தீர்மானத்தை மேற்கொண்டுள்ளார்.இலங்கை இராணுவத்தின் சிரேஷ்ட அதிகாரியும், பொறியியலாளருமான ஜெனரல் மகேஷ் சேனாநாயக்க விஷேட படையணியின் கேர்னலாகவும் பணியாற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.