உள்நாட்டு செய்தி
கண்டி நகரில் போதிய கழிவறை வசதிகள் இல்லை!
உலக பாரம்பரிய நகரமான கண்டிக்கு வருகை தரும் மக்கள் போதிய கழிவறை வசதிகள் இன்றி சிரமங்களை எதிர்கொள்வதாக தெரிவிக்கப்படுகிறது.கண்டி நகரின் சனத்தொகை 125,654 ஆக இருந்தாலும் நாளாந்தம் ஐந்து இலட்சம் மக்கள் தமது தேவைகளை பூர்த்தி செய்து கொள்வதற்காக நகருக்கு வருகின்றனர். ஸ்ரீ தலதா மாளிகையை வழிபடுவதற்காகவும் கண்டி போதனா வைத்தியசாலை மற்றும் அரச நிறுவனங்களுக்கும் பெருமளவான மக்கள் வருகின்றனர்.இவ்வாறு ,தினமும் நகருக்கு வந்து செல்லும் பெருந்திரளான மக்களுக்கு போதிய கழிப்பறை வசதி இல்லை என்று கூறப்படுகிறது. கண்டி மாநகரசபைக்கு சொந்தமான மலசலகூடங்கள் ஒப்பந்த அடிப்படையில் தனியாருக்கு வழங்கப்பட்டுள்ள போதிலும், அந்த நிறுவனங்களால் உரிய முறையில் பராமரிக்கப்படாமல் இருப்பதுடன், சில கழிவறைகள் போதிய தண்ணீர் வசதியில்லாமல் மிகவும் அசுத்தமான நிலையில் காணப்படுகின்றன.
மஹய்யாவ மற்றும் நகரைச் சுற்றியுள்ள பகுதிகளில் ஜெயிக்காவின் உதவியுடன் கட்டப்பட்ட சில பொதுக் கழிவறைகள் பயன்படுத்த முடியாத அளவுக்கு பாழடைந்துள்ளதாகவும், அதிலிருந்து வரும் நீர் பிரதான வடிகால் அமைப்பில் கலந்து இறுதியில் மகாவலி ஆற்றில் பாய்வதாகவும் சுற்றுச்சூழல் நீதி மையம் தெரிவித்துள்ளது. .