உள்நாட்டு செய்தி
காங்கேசன்துறை – நாகப்பட்டினம் கப்பல் சேவை மீண்டும் ஆரம்பம்
தமிழ் நாட்டின் நாகப்பட்டினத்திலிருந்து இலங்கையின் காங்கேசன்துறை வரையான கப்பல் சேவையை நாளை மீண்டும் ஆரம்பிப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.முன்னதாக குறித்த கப்பல் சேவையை கடந்த 13 ஆம் திகதி ஆரம்பிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தது. சில சட்டரீதியான அனுமதிகள் உள்ளிட்ட காரணங்களால் தாமதம் ஏற்பட்டதுடன் நாளைய தினம் வரையில் அந்த செயற்பாடு பிற்போடப்பட்டுள்ளது.ஏற்கனவே பயணத்தை மேற்கொள்வதற்காக பதிவுகளை மேற்கொண்ட பயணிகள் நாளை அல்லது அதற்குப் பின்னர் தாம் விரும்பிய திகதிகளில் பயணிக்க முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.அதேநேரம் பதிவினை மேற்கொண்ட பயணிகள் செலுத்திய கட்டணத்தினை முழுமையாக மீளப்பெற விரும்பினால் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரியுடன் தொடர்பு கொண்டு கட்டணத்தினை மீளப்பெற முடியும் என குறிப்பிடப்பட்டுள்ளது.