Connect with us

முக்கிய செய்தி

தேசிய மனிதவள மாநாடு 2024…!

Published

on

இலங்கையின் பட்டய பணியாளர் முகாமைத்துவ நிறுவனம் (CIPM), தேசிய மனிதவள மாநாடு 2024 ஐ எதிர்வரும்   ஜூன் 5 மற்றும் 6 ஆம் திகதிகளில் ஸ்ரீ ஜெயவர்தனபுர கோட்டே Monarch இம்பீரியலில் நடத்தவுள்ளது. “மனிதவள எல்லை” என்பது மாநாட்டின் கருப்பொருளாகும். பிரதான மாநாட்டைத் தவிர, ‘சிறந்த மனிதவள விவாதம்’ மற்றும் ‘தேசிய மனிதவள கண்காட்சி’ ஆகியவை இந்த நிகழ்வில் இடம்பெறும்.இந்த மாநாட்டில் கூட்டான்மை நிறுவனங்கள், ஊதியம் பெறும் துறை நிறுவனங்கள் மற்றும் பிற தொழில்கள் மற்றும் வெளிநாட்டு பங்கேற்பாளர்கள்  என கிட்டத்தட்ட 1200 பங்கேற்பாளர்கள் கலந்துகொள்ளவுள்ளனர். மனிதவள எல்லையை தீர்மானிக்கும் தலைவர்களை உருவாக்குவதே இந்த தேசிய மனிதவள மாநாட்டின் நோக்கமாகும்.CIPMஇன் தேசிய மனித வள மாநாடு மனித வள முகாமைத்துவம் சகோதரத்துவம் மற்றும் சிக்கலான சமூக-பொருளாதார நெருக்கடியில் வணிக செயற்பாடுகளை  முன்னெடுப்பதற்குப் பொறுப்பான பிற நிபுணர்களுக்கு உதவும்.அனைத்து நிறுவனங்களுக்கும் மனித வள காரணி ஒரு உந்து சக்தியாக இருக்கும் இன்றைய சவால்களுக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த பல்வேறு தலைப்புகளில் பேசும் தலைமை நிர்வாக அதிகாரிகள் மற்றும் நிபுணர்களை பேச்சாளர்களாக உள்ளடக்கியதாக இந்த மாநாடு அமையவுள்ளமை குறிப்பிடத்தக்கது.எதிர்வரும்   ஜூன் 5 மற்றும் 6 ஆம் திகதிகளில் ஸ்ரீ ஜெயவர்தனபுர கோட்டே Monarch இம்பீரியலில் நடைபெறவுள்ள இம்மாநாட்டில் 800 க்கும் மேற்பட்ட பங்கேற்பாளர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. NHRC 2024 இல் முக்கிய பேச்சாளராக  இருக்கும் நிக் ஜோன்சன், வணிக வலையமைப்பு, மனநல ஆலோசனை, மற்றும் தனிப்பட்ட வளர்ச்சி போன்ற பல விடயங்கள் தொடர்பில் உரையாற்றுவார்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *