உள்நாட்டு செய்தி
பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்கள் தீர்மானம்…!
பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்கள் ஆரம்பித்துள்ள பணிப்புறக்கணிப்பை இன்று (15) முதல் தீவிரப்படுத்த தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.கடந்த 13 ஆம் திகதி அமைச்சரவைக்கு அனுப்பப்பட்ட 2 அமைச்சரவைப் பத்திரங்களுக்கு உரிய தீர்வு காணப்படவில்லை என பல்கலைக்கழக தொழிற்சங்கங்களின் கூட்டுக் குழுவின் இணைத் தலைவர் தம்மிக்க எஸ். பிரியந்த தெரிவித்தார்.இதற்கமைய பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்களின் பணிப்புறக்கணிப்பு போராட்டம் 14 வது நாளாக இன்றும் தொடர்கிறது.இந்நிலையில், சகல ஊழியர்களும் பிள்ளைகளின் கல்வியில் கவனம் செலுத்தி பணிக்கு வருமாறு கேட்டுக் கொள்ளப்படுவதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் சிரேஷ்ட பேராசிரியர் சம்பத் அமரதுங்க தெரிவித்துள்ளார்.இதேவேளை, பல கோரிக்கைகளை முன்வைத்து கிராம அதிகாரிகளால் ஆரம்பிக்கப்பட்ட 3 நாள் சுகயீன விடுமுறையை அறிவிக்கும் தொழிற்சங்க நடவடிக்கையில் நிர்வாக கிராம அதிகாரிகள் இணைந்து கொள்ளவுள்ளனர்.