உள்நாட்டு செய்தி
‘டிக்டொக்’ வீடியோவால் நேர்ந்த அனர்த்தம்…!
நீர்கொழும்பு – படல்கம பகுதியில் ஒரு தொகை பென்டோல் மாத்திரைகளை உட்கொண்ட ஒருவர் நீர்கொழும்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,படல்கம – காசிவத்த பகுதியில் வசிக்கும் பெண் ஒருவர் வேலைவாய்ப்புக்காக வெளிநாடு சென்றுள்ளார்.குறித்த பெண், தொடர்ச்சியாக TIKTOK சமூக வலைத்தளத்தில் வீடியோக்களை செய்து பதிவேற்றி வந்துள்ளார்.TIKTOK சமூக வலைத்தளத்தில் இவ்வாறு வீடியோக்களை பதிவேற்ற வேண்டாம் என குறித்த பெண்ணின் கணவர் கூறி வந்துள்ளதாக தெரியவருகிறது.எனினும் கணவரின் கருத்தை பொருட்படுத்தாமல் குறித்த பெண் வீடியோக்களை தொடர்ந்தும் பதிவேற்றியுள்ளார்.இதையடுத்தே, கணவர் பென்டோல் மாத்திரைகளை அருந்தியுள்ளதாக தெரியவந்துள்ளது.