உள்நாட்டு செய்தி
பரீட்சை நிலையத்திற்குச் சென்ற இரு பாடசாலை மாணவிகள் மாயம்!
கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சைக்குத் தோற்றுவதற்காக நேற்றைய தினம் பரீட்சை நிலையத்திற்குச் சென்ற இரு பாடசாலை மாணவிகள் காணாமல் போயுள்ளதாக கினிகத்தேனை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.குறித்த மாணவிகள் இருவரும் நேற்று காலை கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சைக்குத் தோற்றுவதற்காக அம்பகமுவ பகுதியிலுள்ள பாடசாலை பரீட்சை நிலையத்திற்கு பிரவேசித்துள்ளனர்.சம்பவம் தொடர்பில் கினிகத்தேனை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.