முக்கிய செய்தி
மட்டக்களப்பில் புகையிரதம் மோதி விபத்து…!
மட்டக்களப்பில் இருந்து கொழும்பு நோக்கி சென்ற புகையிரதத்தில் மோதுண்ட ஒருவர், பலத்த காயங்களுடன் வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மட்டக்களப்பு பொத்தானை புகையிரத கடவையில் இன்று (14.05.2024) காலை 07.20 மணியளவில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.
ஓட்டமாவடி காவத்தமுனை ஹிஸ்புல்லாஹ் வீதியை வசிப்பிடமாக கொண்ட 39 வயதுடைய நபர் ஒருவரே இவ்வாறு காயமடைந்துள்ளார்.
அதனையடுத்து, காயமடைந்தவர் வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.