உள்நாட்டு செய்தி
மதவாச்சியில் துப்பாக்கி சூடு
அனுராதபுரம்\ மதவாச்சி மஹாதிவுல்வெவ பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் பெண் ஒருவர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
குறித்த சம்பவமானது நேற்று (10.05.2024) இரவு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.
இதன்போது அடவீரகொல்லேவ பிரதேசத்தில் வசிக்கும் 44 வயதுடைய பெண் ஒருவரே காயமடைந்துள்ளார்.
இந்நிலையில் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான பெண் மதிவாச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் மேலதிக சிகிச்சைக்காக அனுராதபுரம் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
தனிப்பட்ட தகராறு காரணமாகவே துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாக பொலிஸாரின் முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
துப்பாக்கிச் சூடு நடத்திய நபர் பிரதேசத்தை விட்டுத் தப்பிச் சென்றுள்ளதுடன், சந்தேக நபரைக் கைது செய்வதற்கான மேலதிக விசாரணைகளை மதவாச்சி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.