உள்நாட்டு செய்தி
பெயர் மாற்றப்பட்ட கந்தக்காடு புனர்வாழ்வு சிகிச்சை நிலையம்…!
கந்தக்காடு புனர்வாழ்வு சிகிச்சை நிலையத்தின் பெயர் நவோதாவ சிகிச்சை நிலையமாக மாற்றியமைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் தேசிய அபாயகர ஔடதங்கள் கட்டுப்பாட்டு சபை பரிந்துரையின் கீழ் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தல் மூலம் பெயர் மாற்றப்பட்டுள்ளது.
மேலும், கந்தகாடு புனர்வாழ்வு நிலையம் நவோதாவ சிகிச்சை நிலையமாக மாற்றியமைக்கப்பட்டுள்ளதாக புனர்வாழ்வு ஆணையாளர் நாயகம் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் டி. டி.யு. கே. செனவியாராச்சி நீதிச்சேவை ஆணைக்குழுவின் செயலாளர் எம். எஸ். சோமரத்னவுக்கு கடிதம் மூலம் அறிவித்துள்ளார்.
இந்நிலையில் கந்தக்காடு புனர்வாழ்வு சிகிச்சை நிலையத்திலிருந்து போதைக்கு அடிமையானவர்கள் தப்பிச் செல்லும் பல சம்பவங்கள் அண்மைய நாட்களில் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.