உள்நாட்டு செய்தி
தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல் திருத்தச் சட்டமூலம் பாராளுமன்றத்தில் முன்வைப்பு..!
தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல் திருத்தச் சட்டமூலம் இன்று (10) பாராளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டுள்ளது.
இந்த சட்டம் 28 வருடங்களுக்கு பின்னர் திருத்தியமைக்கப்படவுள்ளதாக தொழில்நுட்ப இராஜாங்க அமைச்சர் கனக ஹேரத் தெரிவித்தார்.
தொலைத்தொடர்புகளை வலுப்படுத்துவதற்காக, தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கான கோபுரங்களை நிர்மாணிக்கும் செயற்பாடுகளை இதனூடாக மூன்றாம் தரப்பினருக்கு வழங்க எதிர்பார்க்கப்படுவதாக அவர் தெரிவித்தார்.
இதுவரை உரிய தொலைத்தொடர்பு நிறுவனங்களே தமக்கான தொலைத்தொடர்பு கோபுரங்களை நிர்மாணித்து வந்துள்ளதாகவும் அவற்றுக்கு தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு 50% நிதியையும் உரிய தொலைத்தொடர்பு நிறுவனங்கள் 50% நிதியையும் வழங்குவதாகவும் தொலைத்தொடர்பு நிறுவனங்களின் செயற்றிறனை அதிகரித்தல் மற்றும் 4G தொழில்நுட்பத்தை நாடளாவிய ரீதியில் விரிவுபடுத்தல் ஆகிய நோக்கங்களை தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல் திருத்தச் சட்டமூலத்தினூடாக அடைய எதிர்பார்த்துள்ளதாகவும் அவர் இதன்போது தெரிவித்தார்.