உள்நாட்டு செய்தி
சிறுபோக உர கொள்வனவிற்காக நிதி விடுவிப்பு !
சிறுபோகத்திற்கான உர கொள்வனவிற்காக விவசாயிகளின் வங்கிக் கணக்குகளுக்கு 211 மில்லியன் ரூபா விடுவிக்கப்பட்டுள்ளதாக விவசாய அபிவிருத்தி திணைக்களம் தெரிவித்துள்ளது.
அம்பாறை, அனுராதபுரம், ஹம்பாந்தோட்டை, குருநாகல் மற்றும் பொலன்னறுவை உள்ளிட்ட பல மாவட்டங்களை சேர்ந்த விவசாயிகளுக்காக இந்த நிதி விடுவிக்கப்பட்டுள்ளதாக திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
இந்த வருடம் 60,000 ஹெக்டேர் நிலப்பரப்பில் நெற்செய்கையை மேற்கொள்ள எதிர்பார்க்கப்படுகின்றது.
உர மானியத்திற்காக 7 பில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் உரங்களை கொள்வனவு செய்வதற்காக ஹெக்டேருக்கு 15,000 ரூபா வழங்கப்படும் எனவும் திணைக்களம் மேலும் குறிப்பிட்டுள்ளது.