உள்நாட்டு செய்தி
O/L பரீட்சைக்கு தோற்றிய மாணவன் தாக்கப்பட்ட சம்பவம் – இருவர் கைது !
பரீட்சை மண்டபத்திற்குள் அத்துமீறி பிரவேசித்து, கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைக்கு தோற்றிய மாணவர் ஒருவரைத் தாக்கிய குற்றச்சாட்டில் இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ரத்கம பகுதியில் உள்ள பாடசாலையொன்றில் ஸ்தாபிக்கப்பட்டுள்ள பரீட்சை மண்டபத்திலேயே குறித்த சம்பவம் பதிவாகியுள்ளது.
கைதானவர்கள் அதே பாடசாலையில் உயர் தரத்தில் கல்வி கற்பவர்கள் என தெரியவந்துள்ளது.
நேற்று பிற்பகல் இடம்பெற்ற குறித்த தாக்குதலில் பரீட்சைக்கு தோற்றிய மாணவனின் தலையில் காயம் ஏற்பட்டிருந்த போதிலும் அவர் பரீட்சையில் பங்கேற்றிருந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் காலி நீதவானிடம் முன்னிலைப்படுத்தப்பட்ட நிலையில் அவர்கள் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்