உள்நாட்டு செய்தி
ஆயுர்வேத மசாஜ் நிலையம் என்ற போர்வையில் விபசார விடுதி ; 6 பேர் கைது!
கல்கிஸ்ஸை பொலிஸ் பிரிவிற்குற்பட்ட பகுதி ஒன்றில் ஆயுர்வேத மசாஜ் நிலையம் என்ற போர்வையில் விபசார விடுதி நடத்தி வந்ததாகக் கூறப்படும் இடத்தை சுற்றிவளைத்த கல்கிஸ்ஸை பொலிஸார் 6 பேரை கைது செய்யப்பட்டுள்ளனர்.
கல்கிஸ்ஸை பொலிஸ் குற்றத்தடுப்பு பிரிவினர்களுக்குக் கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கல்கிஸ்ஸை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.