உள்நாட்டு செய்தி
மின் கட்டண குறைப்பு முன்மொழிவுகளை சமர்ப்பிக்குமாறு மின்சார சபைக்கு PUCSL அறிவிப்பு..!
மின் கட்டண குறைப்பு தொடர்பான முன்மொழிவுகளை எதிர்வரும் 10ஆம் திகதிக்கு முன்னர் சமர்ப்பிக்குமாறு இலங்கை மின்சார சபைக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக இலங்கை பொது பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இம்மாதம் முதலாம் திகதி இந்த முன்மொழிவு சமர்ப்பிக்கப்பட்டிருக்க வேண்டும் என்பதுடன் இலங்கை மின்சார சபை அதற்கு கால அவகாசத்தை கோரியிருந்ததாக ஆணைக்குழுவின் பேச்சாளரொருவர் தெரிவித்துள்ளார்.
அதற்கமைய, எதிர்வரும் 10ஆம் திகதி வரை குறித்த முன்மொழிவுகளை சமர்ப்பிப்பதற்கு கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. குறித்த முன்மொழிவுகள் கிடைத்ததன் பின்னர் மின் கட்டணங்களை குறைப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும் என ஆணைக்குழு சுட்டிக்காட்டியுள்ளது.
அதன்படி மின் கட்டணங்களை குறைப்பது தொடர்பான விபரங்களை எதிர்வரும் ஜூலை மாதத்தில் அறிவிக்க முடியும் என இலங்கை பொது பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்தது.