Connect with us

Sports

மகளிர் T20 தகுதிச்சுற்றில் இலங்கை அணி

Published

on

 

மகளிர் சர்வதேச இருபதுக்கு 20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடருக்கான தகுதிகாண் சுற்றில் இலங்கை மகளிர் அணி சம்பியனானது.

ஸ்கொட்லாந்து மகளிர் அணிக்கு எதிரான போட்டியில் இலங்கை மகளிர் அணி 68 ஓட்டங்களால் வெற்றியீட்டியது.

அபுதாபியில் நடைபெற்ற இந்த போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை மகளிர் அணி, 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 169 ஓட்டங்களை பெற்றது.

சமரி அத்தபத்து 63 பந்துகளில் 102 ஓட்டங்களை அதிரடியாக விளாசினார்.

வெற்றி இலக்கை நோக்கி களமிறங்கிய ஸ்கொட்லாந்து மகளிர் அணியால் 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 101 ஓட்டங்களை மாத்திரமே பெற முடிந்தது.

அதற்கமைய, எதிர்வரும் அக்டோபர் மாதம் பங்களாதேஷின் அனுசரணையில் நடைபெறவுள்ள மகளிர் இருபதுக்கு 20 உலகக் கிண்ணத்திற்கு இலங்கை மகளிர் அணி தகுதி பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.