உள்நாட்டு செய்தி
கொழும்பு – கண்டி பிரதான வீதியின் போக்குவரத்து பாதிப்பு !
கொழும்பு – கண்டி பிரதான வீதியின் போக்குவரத்துக்கு தும்மலதெனிய பகுதியில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
எரிவாயு ஏற்றிச் சென்ற கனரக வாகனம் ஒன்று கவிழ்ந்து விபத்திற்குள்ளானமையினால் குறித்த பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் குறித்த பகுதியின் போக்குவரத்தை சீர்செய்யும் பணியில் பொலிஸார் ஈடுபட்டுள்ளனர்.