முக்கிய செய்தி
ஜனாதிபதியின் புலமைப்பரிசுத் திட்டங்களுக்கு மேலதிகமாக இரு திட்டங்கள்..!
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் அறிவுறுத்தலுக்கமைய தற்போது வழங்கப்படும் புலமைப்பரிசுத் திட்டங்களுக்கு மேலதிகமாக, மேலும் இரண்டு புலமைப்பரிசில் திட்டங்களை ஜனாதிபதி நிதியம் ஆரம்பித்துள்ளது. அதன்படி, பிரிவெனா மற்றும் பெண் பிக்குணி கற்றை நிறுவங்களில் கற்கும் பிக்கு மற்றும் பிக்குணி மாணவர்களுக்கும் ஏனைய மாணவர்களுக்கும், க.பொ.த உயர்தரத்தில் தகவல் தொழில்நுட்பம் கற்கும் மாணவர்களுக்குமான புதிய புலைமை பரிசில் வேலைத்திட்டம் இம்மாதம் முதல் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.
இது தொடர்பிலான மேலதிக விவரங்களையும் விண்ணப்பத்தையும் www.presidentsfund.gov.lk உத்தியோகபூர்வ இணையத்தளம் மற்றும் www.facebook.com/president.fund உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கத்திலிருந்தும் பெறலாம். அதேபோல் இந்த விண்ணப்பம் மற்றும் அறிவுறுத்தல்களை 2024-05-10 அரச வர்தமானியில் பிரசுரிக்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.