உள்நாட்டு செய்தி
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அவசர சந்திப்பு
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைப்பாளர்கள் கொழும்புக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.
கட்சியின் ஸ்தாபகரும் முன்னாள் நிதியமைச்சருமான பசில் ராஜபக்ச இந்த அழைப்பை விடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதன்படி, பொதுஜன பெரமுனவின் அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களும் அமைப்பாளர்களும் இன்று முற்பகல் 10.45க்கு நெலும் மாவத்தையில் உள்ள கட்சியின் தலைமையகத்தில் கூடவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சமகால அரசியல் நிலவரம் குறித்து இதன் போது கலந்துரையாடப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் ஜனாதிபதியுடன் அண்மையில் இடம்பெற்ற சந்திப்பின் போது பேசப்பட்ட விடயங்களும் இன்றைய சந்திப்பில் கலந்துரையாடப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது