உள்நாட்டு செய்தி
புதிய விசா கட்டணம் இன்று முதல் அமுல்…!
சுற்றுலா வீசா கட்டணங்கள் தொடர்பில் அமைச்சரவையானது எடுக்கப்பட்ட தீர்மானம் இன்று (07) முதல் அமுல்படுத்தப்படும் என பொது பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் தெரிவித்துள்ளார்.
இலங்கை வந்தவுடன் ஒரு நபருக்கு 30 நாள் வீசாவிற்கு அறவிடப்படும் 50 டொலர் கட்டணம் இன்று முதல் அமுல்படுத்தப்படும் என அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
இந்தியா, சீனா, ரஷ்யா, ஜப்பான், மலேசியா, தாய்லாந்து, இந்தோனேஷியா ஆகிய 7 நாடுகளுக்கு இதுவரை வழங்கப்பட்டு வந்த இலவச விசா சேவையை மேலும் அமல்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
மேலும், வெளிநாட்டவர் நாட்டிற்குள் பிரவேசிக்கும் போது உரிய விசாக்களை வழங்குவதற்கு குடிவரவுத் திணைக்களம் மீண்டும் பொறுப்பேற்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.