உள்நாட்டு செய்தி
அமெரிக்க டொலரின் பெறுமதியில் மாற்றம்!
நாட்டில் இன்றைய தினம் அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 292 ரூபாய் 07 சதமாக பதிவாகியுள்ளது.இலங்கை மத்திய வங்கி இன்று(06) வெளியிட்டுள்ள நாணய மாற்று விகித அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.கடந்த வெள்ளிக்கிழமை, அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 292 ரூபாய் 12 சதமாகக் காணப்பட்டது.அத்துடன், இன்றைய தினம் அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனைப் பெறுமதி 302 ரூபாய் 30 சதமாக பதிவாகியுள்ளது.கடந்த வெள்ளிக்கிழமை, அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனைப் பெறுமதி 301 ரூபாய் 90 சதமாகக் காணப்பட்டது.