உள்நாட்டு செய்தி
அரச உத்தியோகத்தர்களுக்கு வரிச்சலுகையுடன் கூடிய வாகன இறக்குமதி உரிமம்
ஓய்வு பெற்ற அரச உத்தியோகத்தர்கள், மாகாண அரச உத்தியோகத்தர்கள் மற்றும் நீதிமன்ற உத்தியோகத்தர்களுக்கு வரிச்சலுகையுடன் கூடிய வாகன இறக்குமதி உரிமம் வழங்குவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.கட்டாய ஓய்வு பெறும் வயதெல்லை 65 வரை நீட்டித்து, பின்னர் ஓய்வு பெறும் வயதெல்லை 60 ஆக குறைக்கப்பட்ட நிலையில், அதற்கிடையிலான காலத்தில் 60 வயது பூர்த்தியான பின்னர் ஓய்வு பெற்ற அதிகாரிகளுக்காக இந்த வரிச்சலுகை வழங்கப்பட்டுள்ளது.பொதுநிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் பிரதீப் யசரத்னவினால் வௌியிடப்பட்ட சுற்றறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.இதர தேவைகளை பூர்த்தி செய்யும் உத்தியோகத்தர்களுக்கு வரிச்சலுகையுடன் கூடிய வாகன இறக்குமதி உரிமம் வழங்க கடந்த மார்ச் 11ஆம் திகதி நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டதாக அந்த சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.