உள்நாட்டு செய்தி
மட்டக்களப்பு செங்கலடியில் பஸ் விபத்து : 5 பேர் காயம் !
மட்டக்களப்பு – ஏறாவூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட செங்கலடி பிரதான வீதி சந்தியில் இடம்பெற்ற விபத்தில் ஐவர் காயடைந்துள்ளனர்.
இன்று திங்கட்கிழமை (06) அதிகாலை ஒரு மணியளவில் கல்முனையில் இருந்து மகரகம நோக்கிச் சென்ற இலங்கை போக்குவரத்து சபைக்குச் சொந்தமான பஸ் வண்டியே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.
வேகக் கட்டுப்பாட்டை இழந்த பஸ் மின் கம்பத்துடன் மோதுண்டு வீதியோரம் இருந்த கடைத் தொகுதியிலும் மோதியுள்ளது.
விபத்தில் சாரதி மற்றும் நடத்துநர் உள்ளிட்ட ஐவர் செங்கலடி மற்றும் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். சாரதியின் நித்திரை கலக்கமே விபத்துக்கு காரணம் என கூறப்படுகிறது. இது தொடர்பான மேலதிக விசாரணைகளை ஏறாவூர் பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.