உள்நாட்டு செய்தி
கட்டுநாயக்க விமான நிலையத்தில் பயணியின் பொதியில் மர்மம்
கட்டுநாயக்க பண்டாரநாயக்க விமான நிலையத்தில் பயணி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இலங்கையில் இருந்து சட்டவிரோதமான முறையில் இரத்தினக் கற்களை எடுத்துச் செல்ல முற்பட்ட வேளையில், விமான நிலைய பாதுகாப்புப் பிரிவினர்களால் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஸ்ரீலங்கன் UL 127 விமானத்தின் ஊடாக சென்னை செல்ல முற்பட்ட நபரே இவ்வாறு சிக்கியுள்ளார்.
குறித்த பயணியின் பயணப் பொதியில் இருந்து 482.02 கிராம் எடையுள்ள பல்வேறு வகையான மாணிக்கக் கற்கள் மீட்கப்பட்டுள்ளன.
இவை எக்ஸ்ரே இயந்திரங்களில் சிக்காமல் இருக்க கார்பன் தாள்களினால் சுற்றியுள்ளார். எனினும் அதிகாரிகளால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
குறித்த மாணிக்கக் கற்களின் பெறுமதி 16 இலட்சம் ரூபா என சுங்கத் திணைக்களத்தினால் மதிப்பிட்டுள்ளது.