உள்நாட்டு செய்தி
இன்றும் பல மாகாணங்களில் அதிக வெப்பநிலை
வடக்கு, வடமத்திய, மேல், சப்ரகமுவ, கிழக்கு, தெற்கு மற்றும் வடமேல் மாகாணங்களிலும் மொனராகலை மாவட்டங்களிலும் அதிக வெப்பநிலை நிலவும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
குறித்த பிரதேசங்களை சேர்ந்த மக்கள் வெப்பத்திலிருந்து தம்மை பாதுகாத்துக் கொள்ளும் நடவடிக்கைகளை பின்பற்றுமாறும் சிறுவர்கள் மற்றும் முதியோர்கள் அவதானமாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது .
இதேவேளை, கல்பிட்டியிலிருந்து கொழும்பு, காலி மற்றும் ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளில் மூன்று மீற்றர் வரை அலைகள் எழும்பக்கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.