உள்நாட்டு செய்தி
இருவேறு இடங்களில் இருவர் நீரில் மூழ்கி உயிரிழப்பு..!
இரத்தினபுரி – நிவித்திகல, ஜயபுரகம மற்றும் நுவரெலியா – ஹங்குரான்கெத்த பகுதிகளில் நீரில் மூழ்கி இருவர் உயிரிழந்துள்ளனர்.
31 மற்றும் 45 வயதுடைய இருவரே நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.
நிவித்திகல, ஜயபுரகம பிரதேசத்தில் ஆற்றில் தவறி வீழ்ந்து ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இதேவேளை, ஹங்குரான்கெத்த – அம்பேவல ஓயாவில் நீராடச் சென்ற ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.
இந்த உயிரிழப்புகள் தொடர்பான விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.