உள்நாட்டு செய்தி
இலங்கை வந்தார் ஜப்பானிய வெளிவிவகார அமைச்சர்..!
ஜப்பானிய வெளிவிவகார அமைச்சர் யோகோ கமிகாவா இரண்டு நாட்கள் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இன்று காலை இலங்கை வந்தடைந்துள்ளார்.
இந்த விஜயத்தின்போது ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மற்றும் பிரதமர் தினேஸ் குணவர்தன ஆகியோரை சந்தித்து ஜப்பானிய வெளிவிவகார அமைச்சர் கலந்துரையாட உள்ளார்.
அத்துடன், ஜப்பானிய வெளிவிவகார அமைச்சர் மற்றும் அவரது தூதுக் குழுவினர் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரியுடன் உத்தியோகபூர்வ கலந்துரையாடல்களை நடத்தவுள்ளனர்