உள்நாட்டு செய்தி
க.பொ.த சாதாரண தர பரீட்சார்த்திகளுக்கு விசேட அறிவிப்பு
க.பொ.த சாதாரண தர பரீட்சார்த்திகள் தங்களுடைய தேசிய அடையாள அட்டைகளை பெற்றுக்கொள்வதற்கான சிறப்பு அறிவிப்பொன்றை ஆட்பதிவு திணைக்களம் வழங்கியுள்ளது.
இதன்படி, க.பொ.த (சா/த) பரீட்சார்த்திகள் தங்களுடைய தேசிய அடையாள அட்டைகளைப் பெறுவதற்காக பத்தரமுல்லையில் உள்ள ஆட்பதிவு திணைக்களத்தின் பிரதான அலுவலகம் நாளை (மே 4) காலை 8.30 மணி முதல் பிற்பகல் 1.00 மணி வரை திறந்திருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், காலி, குருநாகல், வவுனியா மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களில் உள்ள மாகாண அலுவலகங்கள் குறித்த காலப்பகுதியில் திறந்திருக்கும் என அலுவலகம் தெரிவித்துள்ளது.