முக்கிய செய்தி
கவனயீர்ப்பு போராட்டம் காரணமாக தாமரைக்கோபுர வீதி பாதிக்கப்பு..!
அரசாங்க நிர்வாக அதிகாரிகளின் கவனயீர்ப்பு போராட்டம் காரணமாக கொழும்பு தாமரைக்கோபுரத்திற்கு செல்லும் வீதியின் போக்குவரத்து முழுவதுமாக பாதிக்கப்பட்டுள்ளது.
குறித்த பேராட்டமானது, இன்று (02.05.2024) முன்னெடுக்கப்பட்டு வருவதுடன் நாளையும் தொடரவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாகவே, அரசாங்க நிறைவேற்று அதிகாரிகளின் கூட்டுக் குழுவினால் சம்பளப் பிரச்சினை உள்ளிட்ட பல கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டிருந்தன.
இதன்போது, மே 2 மற்றும் 3ஆம் திகதிகளை சுகயீன விடுமுறையாக அறிவித்து போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாகவும் அக்குழு தெரிவித்திருந்தது.
இதற்கமையவே, கொழும்பில் தற்போது கவனயீர்ப்புப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.