உள்நாட்டு செய்தி
மக்களுக்கு வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள எச்சரிக்கை
வடக்கு, வடமத்திய, மேற்கு, சப்ரகமுவ, கிழக்கு, தெற்கு மற்றும் வடமேல் மாகாணங்களுக்கும் மொனராகலை மாவட்டத்திற்கும் வெப்ப சுட்டெண் தொடர்பில் வளிமண்டளவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
குறித்த அறிவிப்பானது நாளை( 03) முதல் நரடமுறைக்கு வரும் என திணைக்களம் தெரிவித்துள்ளது.
வடக்கு, வடமத்திய மாகாணங்கள் மற்றும் மட்டக்களப்பு மற்றும் திருகோணமலை மாவட்டங்களில் சில இடங்களில் வெப்ப சுட்டெண், மனித உடலில் உணரப்படும் வெப்பநிலை ‘அதிக எச்சரிக்கை நிலை’ வரை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேற்கு, சப்ரகமுவ, தெற்கு மற்றும் வடமேல் மாகாணங்களிலும் அம்பாறை மற்றும் மொனராகலை மாவட்டங்களிலும் சில இடங்கள் காணப்படும். ஆலோசனையின்படி, வெப்பநிலையின் ‘எச்சரிக்கை’ மட்டத்தின் கீழ், நீண்ட நேரம் வெளிப்படுதல் மற்றும் செயல்பாட்டின் மூலம் சோர்வு சாத்தியமாகும் எனவும், வெப்ப பிடிப்புகள் ஏற்படலாம் எனவும் கூறப்பட்டுள்ளது.
இதற்கிடையில், ‘அதிக எச்சரிக்கை’ மட்டத்தின் கீழ், வெப்பப் பிடிப்புகள் மற்றும் வெப்ப சோர்வு சாத்தியம் என்றும், தொடர்ந்து செயல்படுவதால் வெப்ப பக்கவாதம் ஏற்படலாம் என்றும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இதன்காரணமாக, பொதுமக்கள் அதிக நீரை அருந்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
முடிந்தவரை அடிக்கடி நிழலில் ஓய்வெடுக்கவும் மற்றும் கடினமான வெளிப்புற நடவடிக்கைகளை கட்டுப்படுத்தவும் பொதுமக்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
இலகுரக மற்றும் வெள்ளை அல்லது வெளிர் நிற ஆடைகளை அணியுமாறு திணைக்களத்தினால் கேட்டுக் கொள்ளப்படுள்ளது.