உள்நாட்டு செய்தி
சிறைச்சாலை கைதி தவறான முடிவெடுத்து உயிர்மாய்ப்பு..!
கண்டி, பல்லேகல சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த கைதி ஒருவர் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்துக் கொண்டுள்ளதாகப் பலகொல்ல பொலிஸார் தெரிவித்தனர்.
கண்டி, மஹய்யாவ பிரதேசத்தைச் சேர்ந்த 27 வயது நபரொருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இவர் போதைப்பொருள் விற்பனை செய்த குற்றச்சாட்டின் பேரில் கண்டி பொலிஸ் குற்றத் தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டு,
நீதிமன்ற உத்தரவின் கீழ் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.