உள்நாட்டு செய்தி
நாடு முழுவதும் வேலை நிறுத்த போராட்டம்!
சம்பளப் பிரச்சினை உள்ளிட்ட பல கோரிக்கைகளை முன்வைத்து இன்று (02) மற்றும் நாளையும் (03) சுகயீன விடுமுறையை அறிவித்து தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடவுள்ளதாக அரசாங்க நிறைவேற்று அதிகாரிகளின் கூட்டுக் குழு தெரிவித்துள்ளது.இதற்கமைய கொழும்பிலும் இன்று கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்று இடம்பெறவுள்ளதாக சங்கத்தின் தலைவர் கே.எல்.உதயசிறி தெரிவித்தார்.இதேவேளை, சம்பள முரண்பாடுகள் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளை முன்வைத்து இன்று நண்பகல் 12.00 மணி முதல் பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளதாக பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர் சங்கம் தெரிவித்துள்ளது.தமது கோரிக்கைகள் தொடர்பில் அதிகாரிகளுக்கு பல தடவைகள் அறிவித்த போதும், இதுவரை தீர்வுகள் கிடைக்கவில்லை அதன் ஊடகச் செயலாளர் சமன் காரியவசம் தெரிவித்தார்.