உள்நாட்டு செய்தி
ஹோமாகமவில் மாணவர்களுக்கு இடையில் மோதல்
கொழும்பின் புறநகர் பகுதியான ஹோமாகமவிலுள்ள ஹோட்டல் ஒன்றில் மாணவர்களுக்கு இடையில் மோதல் நிலை ஏற்பட்டுள்ளது.
பல்கலைக்கழக மாணவர்களால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விருந்துபசார நிகழ்வொன்றில் மோதல் நிலை ஏற்பட்டுள்ளது.
சம்பவத்தில் ஒருவர் காயமடைந்துள்ள நிலையில், 12 பல்கலை மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக ஹோமாகம தலைமையக பொலிஸார் தெரிவித்தனர்.
ஹோமாகம பல்கலைக்கழகத்தில் கல்வி கற்கும் மாணவர்களும் பட்டப்படிப்பு முடித்த பழைய மாணவர்களும் இடையில் விருந்துபசார நிகழ்வொன்று நேற்று இடம்பெற்றுள்ளது.
இதன்போது மாணவர்களுக்கு இடையில் வாக்குவாதம் ஏற்பட்டு வன்முறையாக மாறியதாக ஹோட்டலில் பணி புரியும் ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.