முக்கிய செய்தி
ஐக்கிய தேசியக் கட்சியின் பேரணி
ஐக்கிய தேசியக் கட்சியின் மேதினப் பேரணியில் கலந்து கொள்வதற்காக காலியில் இருந்து மூன்று தொடருந்துகளில் பொதுமக்கள் கொழும்பு நோக்கி வருவதாக கூறப்படுகிறது.
நெருக்கடிமிக்க இக்கட்டான நிலையில் இருந்த நாட்டை மீட்டெடுத்த ரணில் விக்கிரமசிங்கவுக்கு நன்றி தெரிவிப்போம் என்ற தொனிப்பொருளில் இதற்கான ஏற்பாடுகளை நாடாளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்த்தன மேற்கொண்டுள்ளார்.
காலியில் இருந்து கொழும்பு மருதானை வரை புகையிரதத்தில் பயணித்து அங்கிருந்து மாளிகாவத்தை வரை பேரணியாகச் செல்வதற்கு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
சுமார் ஐயாயிரம் வரையான பொதுமக்கள் இந்த பேரணியில் கலந்து கொள்ளவுள்ளதாக கூறப்படுகிறது.