முக்கிய செய்தி
மேதின பாதுகாப்பு கடமையில் 9300 பொலிஸார் !
சர்வதேச தொழிலாளர் தினத்தை முன்னிட்டு இன்று நடைபெறும் மே தின அணிவகுப்பு மற்றும் பேரணிகளின் பாதுகாப்பு கடமையில் 9,000க்கும் மேற்பட்ட பொலிஸார் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.இதில், கொழும்பு நகரில் நடைபெறும் அணிவகுப்பு மற்றும் கூட்டங்களுக்கு 6,000 அதிகாரிகள் ஈடுபடுத்தப்படுவார்கள்.நாடளாவிய ரீதியில் 19 பொலிஸ் பிரிவுகளின் 35 பொலிஸ் களங்களை உள்ளடக்கி மே தின அணிவகுப்புகள் மற்றும் பேரணிகள் நடைபெறுவதாக தெரிவித்த பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பொலிஸாருக்கு மேலதிகமாக, சுமார் 300 விசேட அதிரடிப்படை அதிகாரிகளும் கடமையில் ஈடுபட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.மேலும் தேவையான போது இராணுவத்தினரின் ஆதரவைப் பெறுவதற்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.