உள்நாட்டு செய்தி
சீமெந்தின் விலை குறைப்பு
நாடளாவிய ரீதியில் இன்று 1ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் 50 கிலோகிராம் சீமெந்து பையின் விலை 50 ரூபாயினால் குறைக்கப்பட்டுள்ளதாக சீமெந்து தொழிற்துறை நிறுவனங்கள் அறிவித்துள்ளன.
அதன் பிரகாரம், 50 கிலோகிராம் சீமெந்து பொதியின் புதிய அதி உயர் சில்லறை விலை 2400 ரூபாவாக உள்ளது.
இந்த விலைக் குறைப்புடன் நிர்மாணத் தொழிற்துறை ஊக்கம் பெறும் என தாம் எதிர்பார்ப்பதாக சீமெந்து தொழிற்துறை நிறுவனங்கள் நிறுவனங்கள் அறிவித்துள்ளன.