Connect with us

முக்கிய செய்தி

எரிப்பொருள் விலையில் மாற்றம்..!

Published

on

இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் தமது எரிபொருட்களின் விலைகளை குறைக்க தீர்மானித்துள்ளது.

அதன்படி, ஒக்டேன் 92 ரக பெற்றோல் லீற்றர் ஒன்றின் விலை 3 ரூபாவால் குறைக்கப்படவுள்ள நிலையில் அதன் புதிய விலை 368 ரூபாவாகும்.

ஒக்டேன் 95 ரக பெற்றோல் லீற்றர் ஒன்றின் விலை 20 ரூபாவால் குறைக்கப்படவுள்ள நிலையில் அதன் புதிய விலை 420 ரூபாவாகும்.

அதேபோல், ஒரு லீற்றர் லங்கா டீசலின் விலை 30 ரூபாவால் குறைக்கப்பட்டவுள்ள நிலையில் அதன் புதிய விலை 333 ரூபாவாக குறைவடையவுள்ளது.

சூப்பர் டீசல் ஒரு லீற்றரின் விலை 9 ரூபாவால் குறைக்கப்படவுள்ள நிலையில் அதன் புதிய விலை 377 ரூபாவாகும்.

மேலும், மண்ணெண்ணெய் லீற்றர் ஒன்றின் விலை 20 ரூபாவால் குறைக்கப்படவுள்ள நிலையில் அதன் புதிய விலை 215 ரூபாய் என இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது.