உள்நாட்டு செய்தி
சடுதியாக உயர்ந்த தேசிக்காயின் விலை…!
தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்திற்கு கிடைத்த மரக்கறிகளின் மொத்த விலை வீழ்ச்சியடைந்த போதிலும், தேசிக்காய் மற்றும் பச்சை இஞ்சியின் மொத்த விலை வேகமாக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.இதன்படி, ஒரு கிலோ தேசிக்காய் 1000 ரூபா முதல் 1200 ரூபா வரையில் விற்பனை செய்யப்படுவதாக அங்குள்ள வர்த்தகர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.மேலும், ஒரு கிலோ பச்சை இஞ்சி தற்போது 3,000 ரூபா முதல் 3,200 ரூபா வரை அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுதாக தெரிவிக்கப்படுகின்றன.எவ்வாறாயினும், தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்திற்கு அதிகளவு மரக்கறிகள் கையிருப்பில் உள்ள போதிலும் நுகர்வோர் அவற்றை கொள்வனவு செய்வதற்கு அங்கு வராத நிலை காணப்படுவதாக பொருளாதார நிலையத்தின் வர்த்தகர்கள் தெரிவித்துள்ளனர்.