உள்நாட்டு செய்தி
மனைவியுடன் தொடர்பில் இருந்த நபரை, வெட்டிக் கொன்று விட்டு பொலிஸாரிடம் சரணடைந்த கணவன்..!
ஊரகஸ்மன்ஹந்திய, ரந்தொடுவில பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் மன்னா கத்தியினால் தலையில் தாக்கப்பட்டதில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இவ்வாறு உயிரிழந்தவர் குருஹெங்கொட, ரந்தொடுவில, ஆசாரிவத்த பகுதியைச் சேர்ந்த 35 வயதுடைய திருமணமாகாதவர் என பொலிஸார் தெரிவித்தனர்.
இன்று (30) அதிகாலை கணவர் திடீரென வீட்டிற்கு வந்த போது, அவரது 24 வயது மனைவியுடன் தொடர்பு வைத்திருந்ததாகக் கூறப்படும் நபர் வீட்டில் இருந்த நிலையில்,
ஆத்திரமடைந்த கணவர் அந்த நபரை மன்னா கத்தி ஒன்றால் தலையில் தாக்கியதாகவும் பொலிஸ் விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
காயமடைந்தவர் உரகஸ்மன்ஹந்திய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
தாக்குதல் நடத்திய கணவர் பொலிஸாரிடம் சரணடைந்த பின்னர் கைது செய்யப்பட்டுள்ளார்.